சென்னையில் நேற்று அதிமுக கட்சியின் வட்டச் செயலாளர் ராஜசேகர் என்பவர் மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளது. அதாவது ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது, தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்தது,கோவையில் 15 வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்லும்போது பலாத்காரம் செய்த கர்ப்பமாக்கி  கருவை கலைக்க வைக்க ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டது ஆகிய குற்ற சம்பவங்களின் செய்தியை அதிமுக தங்களுடைய ஐ டி விங் பக்கத்தில் இணைத்துள்ளது.

அதன் பிறகு நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவது போல் விடியா முதல்வரோ விளம்பர மோகத்தில் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார். இதுவா விடியல் இதுவா மக்களுக்கான ஆட்சி என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் ஒருபுறம் தினசரி தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள். மறுபுறம் தங்கு தடையின்றி புரையோடிக் கிடக்கும் போதை பொருட்கள் மறுபுறம் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் என்றும் அதிமுக கடுமையாக விமர்சித்து இதனை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பதாக சாடி உள்ளது.