தமிழகத்தில் பொங்கல் திருநாளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், “காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதையே” என தமிழ்நாடு அரசு தரப்பில் பல்வேறு வாதங்கள் விரிவாக முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது. 2017ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு, தற்போது அனுமதியோடு ஜல்லிக்கட்டு நடந்துவருகிறது.   இதுகுறித்து காரசார விவாதங்கள் நடந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.