
தமிழகத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பட்டப்படிப்புகள் மற்றும் மூன்று பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு கடந்த மே 10ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் ஜூன் ஒன்பதாம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியல் www.tnau.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.