தமிழக போக்குவரத்துக் கழகத்திற்கு ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிப்பதற்கும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி போக்குவரத்து கழகத்திற்காக ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிப்பதற்கும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்திற்கு தலா 58.5 லட்சம் செலவில் 200 பேருந்துகளும், விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை மற்றும் வெள்ளை ஆகிய மாவட்டங்களுக்கு 800 புதிய பேருந்துகளும் வாங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.