தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க ஜூன்-21 ஆம் தேதி கடைசி நாள் என கால்நடை அறிவியல் பல்கலைகழகமானது அறிவித்துள்ளது. கால்நடை மருத்துவப் பட்டப்படிப்புக்கு மொத்தமாக 12,643 மாணவர்கள் நேற்று மாலை வரை விண்ணப்பித்துள்ளார்கள்.

மேலும் ஜூன் 21 ஆம் தேதி மாலை 5 மணி வரை adm.tanuvas.ac.in என்ற வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், கவுன்சிலிங் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும்.