தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மருத்துவர்கள் கொரோனா காலங்களில் பணியாற்றிய சான்றிதழ்களை மருத்துவமனைகளில் சமர்ப்பித்து அதற்கு உரிய மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு 1021 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஆயிரம் மருத்துவர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. இதுவும் எம் ஆர் பி மூலமாக விரைவில் நிரப்பப்படும். அதே சமயம் 983 மருந்தாளர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. 1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கும் தேர்வு முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில மாதங்களில் 3000 திற்கும் மேற்பட்ட மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.