செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், பாராளுமன்றத்தில் வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்….  மணிப்பூர் மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்கள்…   அங்கு நடந்த நிகழ்வுகள்….  சிறுபான்மை மக்கள் மீது….. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல்…. 40 ஆயிரம் பேர் கேம்பில் இருக்காங்க. 60 ஆயிரம் பேரு வீடு இழந்து நிக்குறாங்க. 200 பேர் கொல்லப்பட்டிருக்காங்க.

பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்காங்க..  பொருளாதார ரீதியா பல நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது எல்லாம் பேச தீர்மானமாக கொண்டு வந்தா ? இது சம்மந்தமா பிரதமர் ஏதும் பேசல.  பிரதமர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தா ? கன்வென்சன் படி அவர் பதில் சொல்லணும்.  ஆனால்  அத விட்டுட்டு ரெண்டே கால் மணி நேரத்துல…  ஒரு நிமிஷம் தான் மணிப்பூர் பற்றி பேசினாரு.

பாக்கி எல்லாம் காங்கிரஸ் வரலாறு பற்றியும்,  ராகுல் காந்தி … காந்தி பெயரை கேலி பண்றதுலையும்…  இது மாதிரி பொதுக்கூட்டத்தில் அவர் பேச்சாளர் மாதிரி பேசினாரே…  தவிர ஒரு பிரதமர் மாதிரி அவர் உரை …. பிரதமருக்குரிய தரத்தோடு அமையவில்லை…. அதற்கு முன்னால பேசிய நிதியமைச்சர் என்ன பண்ணி இருக்கணும் ?  எவ்வளவு பேர் வீடு வாசல் இழந்து இருக்காங்க. அவங்களுக்கு என்ன நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டிருக்கிறது.

வீடு இழந்தவர்களுக்கு என்ன வீடு கட்டி கொடுக்கின்றோம்?  என்ன இழப்பீடு  கொடுக்கின்றோம் ? எப்படி ஹெல்ப் பண்ணுறோம்? இத பத்தி பேசி இருப்பதற்கு பதிலாக … அந்த அம்மாவும் ஏதோ மகாபாரதத்தை பத்தி பேசிட்டு இருந்தாங்க. இதுக்கு பதில் சொல்லும் போது முதலமைச்சராக இருக்கின்ற ஸ்டாலின் அவர்கள்….  அவர் முதலமைச்சர் என்ற முறையில், திமுக கட்சித் தலைவர் என்கிற முறையில் மறுப்பு தெரிவிக்கின்றார்.

நான் அன்றைக்கு 1989இல்  புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, இரண்டாவது சுற்றில் கலைஞ்ர் அவர்கள் முதலமைச்சராக வருகின்றார். அப்போது பிரதான எதிர்க்கட்சியின் உடைய தலைவர் செல்வி. ஜெயலலிதா.  நான் பிரதான எதிர்க்கட்சியின் துணை தலைவர். தமிழிசை கூட மூப்பனார் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார், அண்ணன் குமரி ஆனந்தன் எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்தாங்க என்று தெரியாம சொல்றாங்க, பாவம். காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்ற தலைவர் தான் மூப்பனார் அவர்கள் என தெரிவித்தார்.