விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியில் வாகைமலர் இடம்பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகிறது. வாகை என்றால் வெற்றி என்ற அடிப்படையில் கட்சி கொடியில் இந்த மலர் இடம்பெற உள்ளதாக கூறப்படுகின்றது. கட்சிக் கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெறுகிறதாம். இது தொடர்பான தகவல் வெளியாகி தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

வாகை என்ற மரம் தென்காசியாவை பூர்விகமாகக் கொண்டது. இந்த மரம் வெப்பமண்டல பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றது. குறிப்பாக தமிழகத்தில் காணப்படும் பழமையான மரங்களில் இதுவும் ஒன்றாகும். சங்க காலத்தில் போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்ட தாக இலக்கியங்களில் குறிப்புகளும் உள்ளன. அது மட்டுமல்லாமல் இதன் இலை, பூ, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை.