தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை ஒரு ஐஎஸ் பயங்கரவாதியாக மாற்றிவிட்டதாக ஹீரோயின் கூறுகிறார்.   இந்த படம்  கேரள மாநிலத்தை தவறான முறையில் சித்தரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ‘கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், தமிழகத்தில் படம் வெளியானால், அது பெரிய எதிர்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்துள்ளது. மே 5ல் வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரெய்லரில் இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் வகையில் வசனங்கள் உள்ளதால் சர்ச்சையாகியுள்ளது.