தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு மிகவும் கெட்டு விட்டது. கோவையில் இருந்து கேரளாவுக்கு ஒருநாளைக்கு 4,000 முதல் 5,000 லோடு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக வேலுமணி குற்றம் சாட்டினார். குறிப்பாக திமுகவினர் அதிக லஞ்சம் வசூலித்துக் கொண்டு கனிமங்களை விற்றுக் கொண்டு இருக்கின்றனர். 2 ஆண்டு கால திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த திட்டத்தையும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் கனிமவளக் கொள்கையை கண்டுபிடித்து அடுத்த ஒரு வாரத்திற்குள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட இருப்பதாக தெரிவித்துள்ளார். கோவையில் நீதிமன்றத்திலேயே விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்டும், நீதிமன்றத்திற்கு வந்த பெண் மீது ஆசிட் வீச்சு நடைபெற்று அந்தப் பெண் இறந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.