
விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்டமாக நடந்தது. தனது அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள், மக்கள் நலன் என அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார். பெண்களுக்கான பாதுகாப்பு, இளைஞர்கள் எதிர்காலம் கொடி விளக்கம், அரசியல் தலைவர் முன்னோடிகள் என மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் உணர்ச்சி வசமாக விஜய் பேசினார். தமிழக வெற்றி கழக கொடியின் சிவப்பு நிறம் புரட்சி, கட்டுப்பாட்டை குறிக்கிறது. கடியில் உள்ள வாகைப்பூ வெற்றிக்கான அடையாளம். கொடியில் உள்ள போர் யானை, மிகபெரிய பலத்தை குறிப்பிடுகிறது. நட்சத்திரங்கள் செயல் திட்டங்களை குறிக்கும் என கூறியுள்ளார்.