நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆப் சேல் கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக கூட்டுறவு துறை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதி மூலமாக ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு போடப்படும் எடைகளில் உள்ள குளறுபடிகள் குறையும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த இயந்திரங்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டு முறைகளில் வேலை செய்யும் எனவும் இந்த வசதி மூலம் ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளில் இருந்தும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரேஷன் கடைகளில் நடைபெறும் விற்பனையை அதிகாரிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். இந்த புதிய வசதியால் மோசடிகள் தவிர்க்கப்பட்டு வருமானம் பெருகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.