தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் யார் யாருக்கு எல்லாம் உரிமை தொகை வழங்கப்படும் என்பது குறித்த பட்டியலை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய பெண்கள் பயன்பெறலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கலைஞர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை வீடுகளுக்கே சென்று வழங்க நியாய விலை கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்ப பதிவு முகாம்கள் காலை 9.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பெறும் போது பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை பெறுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.