தமிழகத்தில் ஆவின் நிறுவனம் தினம் தோறும் 30 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. பால் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் ஆவின் பால் மக்களுக்கு பச்சை, நீளம் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் நைஸ் என்ற பெயரில் நீல நிற பால் பாக்கெட் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இதில் அனைவரும் பயன் பெறும் வகையிலான கொழுப்பு மற்றும் இதர சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த ஆவின் பால் பாக்கெட்டுகளை டீலர்கள் கொள்முதல் செய்து பொது மக்களுக்கு அரசியல் நிர்ணயித்த விலையை விட கூடுதல் விளக்கி விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. என்னிடையே இது தொடர்பாக பேசிய அமைச்சர், ஆவின் பாலை அதிக விலைக்கு விற்பனை செய்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.