தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.