தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுவாக கோடை காலம் தொடங்கி விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் ஒரு சில வருடங்களில் மார்ச் மாதமே வெயிலின் தாக்கம் தொடங்கிவிடும். என் நிலையில் தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் காணப்படும். இனி வரும் நாட்களில் இரவு நேரங்களில் காற்றின் வேதம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.