தமிழகத்தில் மின் கணக்கீட்டை எளிமைப்படுத்தும் விதமாக விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்ற வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டரை பொறுத்து அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ஒன்பது மாவட்டங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் மின் பயனர்களுக்கு கட்டணம் குறித்த விவரங்கள் எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படும். மின் பயன்பாட்டில் நடைபெறும் முறைகேடுகளும் தவிர்க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.