
தமிழகத்தில் மொத்த மின்சாரத்தின் தேவையை கருத்தில் கொண்டு மின்வாரியம் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட எரிசக்தி துறையின் அறிவிப்புகள் குறித்து விரிவான விளக்கங்களை ஆய்வு கூட்டத்தில் கேட்டறிந்த அமைச்சர் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விண்ணகத்தின் சேவை பிரிவை ஆய்வு செய்தார்.
இங்கு வரும் மின் நுகர்வோர் குறைகளை உடனுக்குடன் சரி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும் என்று மின்வாரிய தலைமை பொறியாளர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.