சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது ஆளும், எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களின் தொகுதி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானோர் விடுபட்டிருப்பதாக அதிமுக உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

பேரவையில் அதற்கு பதிலளித்த முதல்வர், “தகுதியான பெண்களுக்கு 1000 கொடுக்கப்பட்டுள்ளது. 9 லட்சம் பேர் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு பரிசீலனை செய்து கொடுக்கப்படும். ஆதாரம் இருந்தால் கொடுங்கள். சரி செய்யத் தயார்” என்று பேசினார்.