தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.7000 கோடிக்கு நிர்வாக அனுமதியும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாதாக, எதன் அடிப்படையில் யாருக்கு எல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்ற விரிவான அறிவிப்பையும் அரசு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில்  ரூ.1000 உரிமை தொகை திட்டம் தொடர்பாக கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல்படும். மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த விண்ணப்பங்களை பதிவு செய்தல், விண்ணப்பிக்க தகுதி, ஆவணங்கள் சரிபார்த்தல், திட்டம் தொடர்பான சந்தேகங்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் பதிவதிற்கு முன் சந்தேகம் இருந்தால் உடனே கட்டுப்பாட்டு அறையை அணுகவும்.