தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கடந்த 2019 ஆம் வருடத்தின் இறுதியில் ஆசிரியர்களுடைய வருகைப்பதிவு செய்வதற்கு பயோ மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கிடையில் 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று தொடங்கியதால் இந்த முறையை தமிழக அரசு மீண்டும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு கருவிகளை, திரும்ப பெறுவதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள்-பணியாளர்களின் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்க, பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் பணிகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் தேவைப்படுவதால், அரசு பள்ளிகளிடம் இருந்து திருப்பி கேட்கப்பட்டுள்ளது.