தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கபட்டுள்ளது. இதற்கிடையில்  இருக்கைகள், ஜன்னல், கம்பிகள் ஆகியவை சேதமடைந்த பழைய பேருந்துகளை சரி செய்யும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் இயக்கத்துக்கு வர உள்ள, அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயின்ட் அடிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது நீலம், பிங்க் நிறத்தில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் மஞ்சள், வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளன.