ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 2023ம் ஆண்டு சிறந்த மனிதருக்கான விருது முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் மார்ச் 1ல் அபுதாபியில் வழங்கப்பட்ட இவ்விருதை செஸ் கூட்டமைப்பின் து.தலைவர் பரத் சிங் சவுகான் தற்போது முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் சென்று ஒப்படைத்துள்ளார்.

44வது சர்வதேச செஸ்‌ ஒலிம்பியாட்‌, இந்திய வரலாற்றில்‌ முதன்‌ முறையாக தமிழ்நாட்டில்‌, பல்லவர்‌ காலச்‌ சிற்பக்‌ கலையிணை பறைசாற்றும்‌ வரலாற்றுச்‌ சிறப்புமிக்க நகரமான மாமல்லபுரத்தில்‌ கடந்த ஜூலை மாதம் 2022 முதல்‌ ஆகஸ்ட் 8 2022 வரை மிகச்‌ சிறப்புடன்‌ நடைபெற அரசின்‌ சார்பில்‌ 114 கோடி ரூபாய்‌ நிதி நிர்வாக ஒதுக்கீடு செய்து, போட்டி நடத்த அனுமதி கிடைத்த 4 மாத காலத்திற்குள்‌ 44-வது செஸ்‌ போட்டிகளையும்‌, அதன்‌ தொடக்க மற்றும்‌ நிறைவு விழாவினை ஒலிம்பிக்‌ போட்டிகளுக்கு இணையாக உலகமே வியக்கும்‌ வண்ணம்‌ மிகச்‌ சிறப்பாக நடத்திக்‌ காட்டினார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.