தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அந்தியூரில் பலவகை தொழில் நுட்ப கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி என்று இரண்டு உள்ளது. அதில் 1150 மாணவர்கள் உள்ளதாகவும் அதில் இந்த வருடம் 438 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது குறைந்து வருகிறது.

அதனை தடுக்க அரசு பல முயற்சியை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 6295 இடங்களில் 3,154 இடங்கள் காலியாக உள்ளது. தொழில்துறை நாலு புள்ளி ஜீரோ திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி வழங்க ஆசிரியர்களுக்கு உலக தரமிக்க திறன்மிக்க 120 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு சென்னை அம்பத்தூரில் உலகளாவிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.