இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக சென்னைக்கு செல்ல திருநெல்வேலி மற்றும் தாம்பரம் என்ற சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, கும்பகோணம், சிதம்பரம்,விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி மற்றும் தாம்பரம் சிறப்பு ரயில் இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்ட இரவு 8.35 மணிக்கு மதுரை சென்றடையும். பின்னர் மதுரையில் இருந்து 8.40 மணிக்கு புறப்பட்டு மார்ச் 27ஆம் தேதி காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்டது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு வகுப்பு பொது பிரிவில் இரண்டு பெட்டிகளும், குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கையுடன் கூடிய பிரிவில் இரண்டு பெட்டிகள்,இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட இரண்டு பெட்டிகள் இடம் பெற்றுள்ளது. இரண்டாம் வகுப்பு பொது பிரிவில் நான்கு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.