தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். மீண்டும் அண்ணாமலை தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் புதிய தலைவருக்கான போட்டியில் தான் இல்லை என்று கூறிவிட்டார். அதோடு புதிய தலைவராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று தான் யாரையும் பரிந்துரைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிவரும் நிலையில் புதிய தலைவர் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர்களின் பெயர்கள் அடிபடுகிறது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜனிடம் நிருபர்கள் புதிய தலைவர் நியமனம் பற்றி கேட்டனர். அதற்கு அவர் பாஜகவில் தேர்தல் நடைமுறைகள் கிடையாது. மேலும் மேலிடம் யாரை தலைவராக கை காட்டுகிறார்களோ அவர்கள் தலைவராக செயல்படுவார்கள் என்று கூறினார்.