மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அரசு துறை அலுவலகங்கள் அனைத்திலும் காகித பயன்பாடு இல்லாத மின்னணு வழி அலுவலக செயல்முறைகள் அமலில் உள்ளன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் விவரங்கள் அனைத்தும் எமிஸ் இணையதளத்தில் மேலாண்மை செய்யப்படுகின்றன. நலத்திட்ட உதவிகள், பொது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி போன்ற அனைத்து பணிகளும் மின்னணுமயமாக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் பள்ளிகள் தொடங்கி மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாநில இயக்குனரகங்கள் வரை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் காகித கோப்பு முறையில் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு முதல் அனைத்து அலுவலகங்களிலும் இ – ஆஃபீஸ் நடைமுறைகளை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.