தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் உயர்கல்வி செயற்கைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 162 உதவி பெறும் கல்லூரிகள், 1,262 சுயநதி நிறுவனங்கள் உள்ளது.

இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு நடந்து முடிந்தது. பொதுப்பிரிவு முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20ஆம் தேதி வரையும் நடந்தது. இந்நிலையில் தமிழக உயர்கல்வி அரசு கலைக் கல்லூரிகளில் ஜூலை 3 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.