தமிழக அரசு சின்னத்தில் இடம்பெற்றுள்ள முத்திரை கோபுரம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் கோபுரம் தான். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உடைய வடபத்ர சயனர் சன்னதி ராஜகோபுரம் தான் தமிழ்நாடு அரசின் முத்திரையில் இடம் பெற்றுள்ளது.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை ஒன்றை வடிவமைக்க திட்டமிட்டனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் மிக அழகான தோற்றத்துடன் இருக்கிறது அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்து விடலாம் என்று முடிவு செய்து அதனை தமிழக அரசின் சின்னமாக வைத்தனர்.