தமிழக அரசு சார்பில் ட்ரோன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் டிரோன் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. இங்கு  ட்ரோன் பராமரிப்பு, இதன் செயல்பாடுகள் மற்றும் இயங்கக்கூடிய முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்படும். இதற்கு தற்போது குறைவான இடங்கள் மட்டுமே இருப்பதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இது பற்றிய கூடுதல் விவரங்களை www.editin.in என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி முகாம் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறும். இந்த முகாம் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை 954377337, 9360221280 என்ற நம்பருக்கும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்லளாம்.