
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயன் அடைகிறார்கள். இந்த திட்டத்தில் ஏற்கனவே பல பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது மேலும் 1.80 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு இன்னும் 30 நாட்கள் தான் கால அவகாசம் இருக்கிறது.
இதற்கு ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் மனைவிகள், தனியார் நிறுவன ஊழியர்களின் மனைவிகள் விண்ணப்பிக்கலாம். முன்னதாக இவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்த நிலையில் தற்போது அவர்களும் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள், இ சேவை மையங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதோடு கூடுதலாக இ சேவை மையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.