
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இமெயில் ஐடி கிரியேட் செய்து தர வேண்டும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றரிக்கையில், வகுப்பு ஆசிரியர் உதவியுடன் மெயில் ஐடி கிரியேட் செய்யவும், அந்த மெயில் ஐடியை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது தொடர்பான முன்னெடுப்புகளை எடுக்க இந்த தகவல் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.