தமிழகத்தில் இன்று முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை பொது தேர்வு தொடங்குகிறது. ஏற்கனவே 12 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நிறைவடைந்த நிலையில் இன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறுகிறது.

அதன்படி இன்று முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வு துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித குளறுபடியும் இல்லாமல் உரிய முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.