
தமிழக வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமியின் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற புதிய மின்னணு அட்டை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அவர் புதிய மின்னணு அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் முத்துசாமி பேசினார். அவர் பேசியதாவது, கோயம்புத்தூரில் 1152 நியாய விலை கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் 11,42,000 குடும்ப அட்டைகள் மூலமாக சுமார் 34 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள்.
அதன் பிறகு 6000 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல்கட்டமாக 750 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு துறைகளிலும் நடைபெறும் பணிகள் குறித்தும் மக்கள் நலன் குறித்தும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது என்பது உண்மை. ஆனால் தற்போது 90 சதவீத பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து தட்டுப்பாட்டின்றி பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.