
தமிழகத்தில் மீண்டும் பவுத்தி பட்டா முறை அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாதாரர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுக்கு சொத்தை மாற்றும் பவுத்தி பட்டா முறை முதலில் நடைமுறையில் இருந்த நிலையில் பின்னர் அது அமலில் இருந்து நீக்கப்பட்டது. ஒரு நிலத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால் அந்த பட்டாவை வாரிசுதாரர்கள் தங்கள் பெயரில் மாற்றுவதற்கு இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் மற்றும் கணினி பதிவு என ஏராளமான செயல்முறைகளை பின்பற்ற வேண்டி இருக்கிறது. தற்போது மீண்டும் இந்த பட்டா முறை அமல்படுத்தப்பட்ட வாரிசுதாரர்கள் எளிதாக சொத்தை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். இதன் காரணமாகத்தான் மீண்டும் பழைய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பை அனைத்து இ சேவை மையங்கள் முன்பாகவும் ஒட்டி வைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.