தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விரைவு பேருந்துகளுக்கு திங்கள் முதல் வியாழன் வரை ஒரு கட்டணமும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 50 ரூபாய் முதல் 150 ரூபாய் கூடுதலாகவும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் ஜூன் 15ஆம் தேதி வரை சிறப்பு கட்டணம் அமலுக்கு வருகிறது. அதாவது இனி அனைத்து நாட்களும் 50 முதல் 150 ரூபாய் வரை அரசு விரைவு பேருந்துகளில் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.