
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை தடுப்பதற்காக அவ்வபோது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுபானங்கள் கூடுதல் விளக்கி விற்பனை செய்யப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்ற கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இரண்டு மாதத்திற்குள் பில்லிங் இயந்திரம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகளிலோ பார்களிலோ தவறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள அவர், காலி மது பாட்டில்கள் பெறும் திட்டம் அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.