தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், இந்திய விடுதலை நாள், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் ஆகிய ஆறு சிறப்பு நாட்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களும் கூடி கிராமத்தின் வளர்ச்சி குறித்து கலந்த ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . மேலும் கிராம சபை கூட்டம் எந்த மதச்சார்பு தொடர்புடைய வளாகத்திலும் நடக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கிராம சபை கூட்டத்திற்கான செலவினை வரம்பும் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது