விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஸ்ரீவில்லிபுத்தூர், சித்தாலபுத்தூர், குட்டதட்டி, வெங்கடேசலாபுரம், நாச்சியார்பட்டி, காதி போர்டு காலனி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

மதுரை: தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம்ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர்சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, எஸ்டி ஏபிடி சந்து மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சிஎம் ஆர் ரோடு, கொண்டித் தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினபுரம் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் ஒன்று முதல் ஆறுவரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேலஅனுப்பானடி கிழக்கு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருவாரூர்: அடியக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், திருவாரூர் நகர், தெற்கு வீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கள்ளிமந்தயம், சின்னகவுண்டன்வலசு, பொருளுர், கொத்தாயம், கீரனுர், பூசாரிபட்டி, பாலகவுண்டன்பட்டி, அப்பியம் போன்ற பகுதியில் உள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மின் நிறுத்தம் செய்யப்படும்.

சேலம்: கிச்சிப்பாளையம் துணைமின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாதுபாய்குட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், கோட்டை, கலெக்டர் அலுவலகம் அரசு மருத்துவமனை, செவ்வாய்ப்பேட்டை ஒரு பகுதி, முதல் அக்ரஹாரம் ஒரு பகுதி, மேட்டுத் தெரு, செரிரோடு, பிரட்ஸ் ரோடு, மரக் கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒருபகுதி, பட்டைக் கோவில், டவுன் ரயில்வே ஸ்டேஷன், 4 ரோடு ஒரு பகுதி, லைன்மேடு, லைன்ரோடு, வள்ளுவர் நகர், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளைரோடு, திருச்சி ரோடு மற்றும் சங்ககிரி ரோடு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

திருப்பூர்: உடுமலை கிழவன் காட்டூர் துணை மின் நிலையம் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிழவன் காட்டூர், எலையமுத்தூர், மானுப்பட்டி, பெரிசனம்பட்டி, குமரலிங்கம், கல்லாபுரம், செல்வபுரம், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்ப நாயக்கனூர், ஆலம்பாளையம், சாமராயபட்டி, பெருமாள் புதூர், குமரலிங்கம், ருத்ரா பாளையம், குப்பம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை தாம்பரம், ராஜகீழ்ப்பாக்கம் – வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர் மெயின் ரோடு, மாருதி நகர், கோமதி நகர், ஐயப்பா நகர், வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, பிரதீப் அவென்யு, குருநாதர் தெரு, ரங்கா காலனி, வ.உ.சி. தெரு, மாரியம்மன் கோயில் தெரு, சாம் அவென்யு, செம்பாக்கம் மெயின் ரோடு, மகாசக்தி காலனி, சாந்தி நகர், பழனியப்பா நகர், சிவகாமி நகர், வி.ஜி.பி சாந்தம்மாள் நகர், ஐ.ஓ.பி. காலனி, கேம்ப் ரோடு, அவ்வை நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, சின்மயி காலனி, கம்பர் தெரு, அம்பேத்கர் தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்திநகர், துர்கா காலனி, வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும். கே.கே. நகர் பகுதிகளான தசரதபுரம் – காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா காலனி, ஆற்காடு சாலை, பாலாஜி நகர், மதியழகன் நகர், சாலிகிராமம் – அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை, மேற்கு கே.கே. நகர் – பரணி காலனி, காவேரி மருத்துவமனை, சூரியாதெரு, 80 அடி சாலை, பாஸ்போர்ட் அலுவலகம், விருகம்பாக்கம் – என்.எஸ்.கே சந்து, ஷாமளா டவர், சின்மையா நகர் – முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, காமராஜர் சாலையில் மின்தடை ஏற்படும்.

நெல்லை: விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேர்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

தூத்துக்குடி: பீச்ரோடு துணைமின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடப்பதால், இனிகோநகர், ரோச்‌ காலனி சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட்பீட்டர்கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமய நகர், தாமோதர நகர், வண்ணார் தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம்ரோடு, சண்முகபுரம் பிராப்பர் சந்தை ரோடு, காந்திநகர், மேல சண்முகபுரம் 2வது தெரு, ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம்.ஜி.ஆர். நகர் முடுக்குகாடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

ராணிப்பேட்டை: பராமரிப்பு பணிகள் காரணமாக ராணிப்பேட்டை நகரம், வி.சி.மோட்டூர், பிஞ்சி அல்லிகுளம், சின்னதகரகுப்பம், கல்மேல்குப்பம், கல்புதூர், மேலபுலம், உளியநல்லூர், கர்ணாவூர், துறையூர், நெடும்புலி, தண்டலம், ரெட்டிவலம், அகவலம், பனப்பாக்கம், கிருஷ்ணாவரம், சிப்காட், பெல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

. கன்னியாகுமரி: உபமின்நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம் பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்ன முட்டம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டு பொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், தென்தாமரைகுளம், ஊட்டுவாழ்மடம், அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், தென்தாமரைகுளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது