தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை பெறுவதற்கு கைவிரல் ரேகை பதிவே கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கைவிரல் ரேகை பதிவு செய்ய முடியாமல் முதியவர்கள் பலரும் சிரமம் அடைந்தனர்.

இதனால் இந்த முறையை அப்டேட் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் கண் கருவிலே பதிவு மூலம் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய விற்பனை முறையை கருவிகள் மற்றும் கண் கருவிழி பதிவு போன்ற கருவிகளைக் கொண்டு பொருட்கள் விநியோகம் செய்யும் முறை தமிழகத்தில் 70 ரேஷன் கடைகளில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.