
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு பணிகளில் செய்ய வேண்டிய தற்காலிக பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பள்ளி கட்டிடங்கள் 100% உறுதியாக உள்ளதா என்பதை ஆராய வேண்டும். அதன் பிறகு பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் வகுப்பறைகள், கட்டிடங்கள் விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை தயார் செய்து பட்டியலை 2 வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.