தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்களை கணக்கெடுக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தங்கள் எல்லைக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நேரடி நியமன காலி பணியிட விவரங்களை தயார் செய்ய வேண்டும்.

அதன்படி 2024 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை ஓய்வு பெற இருக்கும் முதல் நிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் விவரங்களை பணியிடம் வாரியாக தனித்தனியாக தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும். அதில் எந்த ஒரு தவறும் நடைபெற கூடாது எனவும் உரிய முறையில் அனைத்து பள்ளிகளையும் செய்து முடிக்க வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.