தமிழகத்தில் தற்போது 11 & 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விரைவிலேயே 2024-25 கல்வியாண்டு துவங்கவுள்ளது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல், தேர்வு அட்டவணை, மாணவர்களை தயார்படுத்துதல் போன்ற பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த சூழலில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நூறு மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு தொடக்கப் பள்ளியில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியரை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் தற்போது 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் கல்வியாண்டில் பாடப் பிரிவு வாரியாக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.