தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது . இந்த அறிவிப்பை முதல்வர் மு க ஸ்டாலின் 2.50 லட்சம் மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்தில் ஊரக பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 2.50 இலட்சம் மாணவர்களுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்ட உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த திட்டத்திற்காக தனியாக உணவுப் பொருட்களை வைக்க, சமையல் செய்ய, தேவையான இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்கும் படி சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளர்களுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.