தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி வகுப்புகள் நடைபெறுவது கல்வித் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறதா என்பதை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் கவனிக்க வேண்டும் எனவும் இந்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.