தமிழகத்தில் கல்வி உரிமை சட்டத்தின் படி மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. ஆனால் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விதியை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.