தமிழகத்தில் மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி உறுதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர ஏதுவாக அந்தந்த பள்ளிகளில் உறுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

ஆனால் சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்படுவதாக மாணவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில் இனி வரும் காலங்களில் மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி உறுதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.