
தமிழகத்தில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறப்பித்த நிலையில் இது நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா தெரிவித்துள்ளார். இதற்காக மாவட்டம் தோறும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகின்றது. மிக விரைவில் படிப்படியாக அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்கப்படும். சில இடங்களிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பெயர் பலகை வைக்கப்படுகிறது. இதனைப் புரிந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.