தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த அறிவிப்பில் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடு தோறும் குழாய் இணைப்பு மூலமாக குடிநீர் வழங்குவதை கிராம சபை கூட்டத்தின் போது உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.