மத்திய பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கு எந்த வித அறிவிப்பும் இல்லாததால், தமிழ்நாடு என்ற வார்த்தை உரையில் ஒரு முறை கூட இடம்பெறவில்லை. வழக்கமாக, நிர்மலா சீதாராமன் தனது உரையில் ஏதேனும் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டுவார். ஆனால் இந்த பட்ஜெட் உரையில் அவர் திருக்குறளை சுட்டிக்காட்டவில்லை. இதனால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்று சொல்லாமல் விட்டதில் எந்த அரசியலும் இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் முழுமையான பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலத்தையும் தனித்தனியாக கூற வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.